வீடுகளில் சாராயம் பதுக்கி வைத்து விற்பனை
வீடுகளில் சாராயம் பதுக்கி வைத்து விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரியில் முதலியார்பேட்டை, மணமேடு, வேல்ராம்பேட் ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளில் சாராயம் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக கலால்துறைக்கு தகவல் வந்தது. அதன்பேரில் சம்பந்தப்பட்ட வீடுகளுக்கு கலால்துறை தாசில்தார் சிலம்பரசன், வருவாய் அதிகாரிகள் பிச்சையப்பன், நாகராஜ், போலீஸ்காரர்கள் சதீஷ், லெனின், மணிகண்டன் ஆகியோர் அதிரடியாக சோதனை நடத்தினர்.
அப்போது முதலியார்பேட்டையை சேர்ந்த கூலித்தொழிலாளியான ஆனந்த் (வயது29) என்பவரது வீட்டில் 9 லிட்டர் சாராயமும், மணமேடு பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் (75) என்பவரது வீட்டில் 125 லிட்டர் சாராயமும், வேல்ராம்பேட் பகுதியை சேர்ந்த ராஜன் (24) என்பவரது வீட்டில் 10 லிட்டர் சாராயமும் விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து வீட்டில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்ட சாராயத்தை பறிமுதல் செய்து ஆனந்த், ராமச்சந்திரன், ராஜன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story