சட்டமன்ற அலுவலகங்களில் மருந்து தெளிப்பு
கரப்பான் பூச்சி, செல்அரிப்பு அதிகரிப்பு காரணமாக சட்டமன்ற அலுவலகங்களில் மருந்து தெளிக்கப்பட்டது.
புதுவை சட்டமன்ற வளாகத்தில் முதல்-அமைச்சர், அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள், சட்டசபை செயலக அலுவலகங்கள் அமைந்துள்ளன. இந்த நிலையில் புதிய சட்டமன்ற கட்டிடம் கட்டுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதனிடையே சட்டமன்ற வளாகத்தில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் மற்றும் சட்டமன்ற அலுவலக கட்டிடங்களில் கரப்பான் பூச்சி, செல் அரிப்பு அதிகரித்துள்ளன. குறிப்பாக எலித்தொல்லை அதிகரித்து உள்ளது. அலுவலக ஊழியர்களின் பொருட்களை அவை கடித்து குதறி வருகின்றன.
இதைத்தொடர்ந்து கரப்பான்பூச்சி தொல்லை, செல் அரிப்பை தடுக்கும் விதமாக சட்டமன்ற வளாகத்தில் மருந்து தெளிக்கும் பணி நடந்து வருகிறது. சுவர்களில் துளையிட்டு மருந்து செலுத்தும் பணியும் நடக்கிறது.
Related Tags :
Next Story