தாம்பரம் போலீஸ் கமிஷனர் எம்.ரவி டி.ஜி.பி. ஆனார்
தாம்பரம் போலீஸ் கமிஷனர் எம்.ரவி டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்றார். கூடுதல் டி.ஜி.பி.க்கள் அம்ரேஷ்புஜாரி, ஜெயந்த்முரளி, கருணாசாகர் ஆகியோரும் டி.ஜி.பி.க்களாக பதவி உயர்வு பெற்றனர்.
சென்னை,
இது தொடர்பாக தமிழக அரசு நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறி இருப்பதாவது:-
4 பேருக்கு பதவி உயர்வு
1.எம்.ரவி-தாம்பரம் போலீஸ் கமிஷனராக பணியில் உள்ள இவர் கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. அந்தஸ்தில் உள்ளார். இவர் டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்றுள்ளார். தொடர்ந்து தாம்பரம் கமிஷனராக நீடிப்பார். தாம்பரம் கமிஷனர் பதவி டி.ஜி.பி. அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டுள்ளது.
2.அம்ரேஷ்புஜாரி-இவர் சைபர் கிரைம் பிரிவு கூடுதல் டி.ஜி.பி.யாக பணியாற்றுகிறார். டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்றுள்ளார். அதே பதவியில் நீடிப்பார். சைபர் கிரைம் பிரிவு கூடுதல் டி.ஜி.பி. பதவி, டி.ஜி.பி. அந்தஸ்துக்கு உயர்த்தப்படுகிறது.
3.ஜெயந்த்முரளி-சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி.யாக பணியாற்றும் இவர் டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்றுள்ளார். அதே பிரிவில் தொடர்ந்து நீடிப்பார். சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி. பதவி, டி.ஜி.பி. அந்தஸ்து பெற்றுள்ளது.
4.கருணாசாகர்-இவர் டெல்லியில் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி போலீஸ் பிரிவில் கூடுதல் டி.ஜி.பி.யாக பணியாற்றுகிறார். டி.ஜி.பி. யாக பதவி உயர்வு பெற்றுள்ள இவர் தொடர்ந்து அதே பணியில் நீடிப்பார். இவர் வகிக்கும் பதவி டி.ஜி.பி. அந்தஸ்துக்கு உயர்த்தப்படுகிறது.
எம்.ரவி
டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்றுள்ள தாம்பரம் போலீஸ் கமிஷனர் எம்.ரவி தமிழக காவல்துறையில் பல்வேறு முக்கிய பதவிகளை அலங்கரித்துள்ளார். 1991-ம் ஆண்டு இவர் ஐ.பி.எஸ். அதிகாரியாக தேர்வு பெற்றார். தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தில் இவர் உதவி போலீஸ் சூப்பிரண்டாக தனது பணியை தொடங்கினார்.
வட சென்னை இணை கமிஷனராக பணியாற்றிய போது ரவுடிகள் கொட்டத்தை அடக்கினார். போக்கு வரத்து போலீஸ் இணை கமிஷனராக சென்னையில் பணியாற்றிய போது, இவரே நேரடியாக களத்தில் இறங்கி போக்குவரத்தை சீர் செய்தார். ஐ.ஜி.யாகவும், கூடுதல் டி.ஜி.பி.யாகவும் இவர் திறம்பட பணியாற்றி உள்ளார். இவர் தனது மெச்சத்தகுந்த பணிக்காக 2 முறை ஜனாதிபதி பதக்கம் பெற்றிருக்கிறார்.
அம்ரேஷ்புஜாரி-ஜெயந்த்முரளி
டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்றுள்ள அம்ரேஷ்புஜாரி ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் 1991-ம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரியாக தேர்வு பெற்று, தமிழக காவல்துறையில் நுழைந்தார். பல்வேறு பதவிகளில் சிறப்பாக பணி புரிந்துள்ளார். உளவுப்பிரிவில் பணியாற்றிய போது முத்திரை பதித்தார்.
டி.ஜி.பி.யான ஜெயந்த்முரளி தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர் வேளாண்மை பாடத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். இவர் தனது சிறந்த பணிக்காக 2 முறை ஜனாதிபதி பதக்கம் பெற்றவர். முதல்-அமைச்சர் பதக்கமும் பெற்றுள்ளார். சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.யாகவும், லஞ்ச ஒழிப்பு கூடுதல் டி.ஜி.பி.யாகவும் திறம்பட பணிபுரிந்துள்ளார்.
கருணாசாகர்
டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்றுள்ள கருணாசாகர் 1991-ம் ஆண்டு தமிழக காவல்துறையில் ஐ.பி.எஸ். அதிகாரியாக பணியில் சேர்ந்தார். பல்வேறு பதவிகளில் சிறப்பாக பணியாற்றியவர். நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண் டாக பணியாற்றிய போது, தனி முத்திரை பதித்தார்.
சென்னையில் போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனராகவும், வட சென்னை கூடுதல் கமிஷனராகவும் பணியாற்றி உள்ளார்.
16 டி.ஜி.பி.க்கள்
தமிழக காவல்துறையில் தற்போது சைலேந்திரபாபு, சஞ்சய்அரோரா, சுனில் குமார்சிங், கந்தசாமி, ஷகீல்அக்தர், ராஜேஷ்தாஸ், பி.கே.ரவி, சங்கர்ஜிவால், ஏ.கே.விஸ்வநாதன், ஆபாஷ்குமார், டி.வி.ரவிச்சந்திரன், சீமாஅகர்வால் ஆகிய 12 டி.ஜி.பி.க்கள் உள்ளனர். தற்போது டி.ஜி.பி. யாக பதவி உயர்வு பெற்றுள்ள 4 பேரையும் சேர்த்து மொத்தம் 16 டி.ஜி.பி.க்கள் தமிழகத்தில் பதவியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story