கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட விவசாயி மீது தாக்குதல்...!


கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட விவசாயி மீது தாக்குதல்...!
x
தினத்தந்தி 11 March 2022 12:00 AM IST (Updated: 11 March 2022 9:19 AM IST)
t-max-icont-min-icon

களக்காட்டில் கடனை திருப்பி கேட்ட விவசாயியை தாக்கியவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

களக்காடு,

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள கீழசடையமான்குளத்தை சேர்ந்த விவசாயி சண்முகசுந்தரம் (வயது 65). இவரிடம் கடந்த ஆண்டு ஸ்ரீகோவிந்தபேரியை சேர்ந்த பாபநாசம் என்பவர் மாடு வாங்குவதற்காக ரூ. 10 ஆயிரம் கடன் வாங்கி உள்ளார்.

ஆனால் கடனை திருப்பி செலுத்தாமல் பாபநாசம் காலம் தாழ்த்தியுள்ளார். இதனால் கடனை திருப்பி சண்முகசுந்தரம் கேட்கும் போது எல்லாம் இருவருக்கும் வாக்குவாதம் நடந்து உள்ளது.

சம்பவத்தன்று பாபநாசம் நடத்தி வரும் வெல்டிங் கடைக்கு சென்று சண்முகசுந்தரம் பணத்தை திருப்பி கேட்டு உள்ளார். இதனால் அவர்கள் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரம் அடைந்த பாபநாசம், சண்முகசுந்தரத்தை அவதூறாக பேசி கம்பியால் தாக்கினார். 

இந்த தாக்குதலில் சண்முகசுந்தரத்தின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. பின்னர், அருகே உள்ளவர்கள் அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். 

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து களக்காடு போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

Next Story