தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு...!
செய்யாறு அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த 3 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்து உள்ளது.
செய்யாறு,
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ள கீழ்நீர்குன்றம் பகுதியை சேர்ந்த சலவை தொழிலாளி வேணுகோபால் (வயது 31). இவரது மனைவி புனிதா. இந்த தம்பதிகளுக்கு சுஷ்மிதா (3) என்ற குழந்தை உள்ளது.
நேற்று மாலை 6 மணி அளவில் சுஷ்மிதா வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டு இருந்து உள்ளார். குழந்தை வீட்டின் முன்தானே நிற்கின்றாள் என்று தாய் புனிதாவு வீட்டில் வேலையை கவனித்து உள்ளார்.
இந்த நிலையில் வீட்டின் முன் விளையாடி கொண்டிருந்த குழந்தை அருகே உள்ள குழாய் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்துள்ளார். அப்போது குழந்தையை காணவில்லை என்று தாய் புனிதான தேடி உள்ளார். அங்கு உள்ள குழாய் தொட்டியில் குழந்தை முழ்கிய நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் உடனடியாக குழந்தையை வெளியே கொண்டு வந்து சிகிச்சைக்காக மானாமதி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து குழந்தையின் தந்தை வேணுகோபால் அளித்த புகாரின் அடிப்படையில் அனக்காவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story