புதுவையில் கொரோனா பாதிப்பில்லை
புதுவையில் புதிதாக கொரோனா பாதிப்பில்லை
புதுவையில் காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 433 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் ஒருவருக்குக்கூட தொற்று கண்டறியப்படவில்லை. தற்போது 21 பேர் ஆஸ்பத்திரிகளில் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று 6 பேர் குணமடைந்தனர். குணமடைவோர் எண்ணிக்கை 98.80 சதவீதமாக உள்ளது.
நேற்று முதல் தவணை தடுப்பூசியை 133 பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 1,257 பேரும், பூஸ்டர் தடுப்பூசியை 30 பேரும் செலுத்திக் கொண்டுள்ளனர். இதுவரை 16 லட்சத்து 2 ஆயிரத்து 392 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story