புதுச்சேரி, காரைக்காலில் தேசிய மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடக்கிறது
புதுச்சேரி, காரைக்காலில் தேசிய மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடக்கிறது.
புதுச்சேரி
புதுச்சேரி, காரைக்காலில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடக்கிறது.
புதுவை மாநில சட்டப்பணிகள் ஆணைய உறுப்பினர் செயலரும், மாவட்ட நீதிபதியுமான சோபனாதேவி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மக்கள் நீதிமன்றம்
புதுவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், காரைக்கால் மாவட்ட நீதிமன்ற வளாகம், மாகி மற்றும் ஏனாம் நீதிமன்ற வளாகங்களில் சனிக்கிழமை தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது. இதில் சமாதானமாக கூடிய கிரிமினல் வழக்குகள், காசோலை வழக்குகள், வாகன விபத்து நஷ்டஈடு வழக்குகள், கணவன், மனைவி பிரச்சினை சம்பந்தப்பட்ட வழக்குகள், குடும்ப நீதிமன்ற வழக்குகள், ஜீவனாம்ச வழக்குகள், உரிமையியல், வங்கிக்கடன் சம்பந்தப்பட்ட நேரடி வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட உள்ளது.
புதுவை மாநில சட்டப்பணிகள் ஆணைய செயல் தலைவரும் ஐகோர்ட்டு நீதிபதியுமான ராஜா தலைமை தாங்கி தேசிய மக்கள் நீதிமன்றத்தை தொடங்கி வைக்க உள்ளார். இந்த நிகழ்ச்சியில் புதுவை தலைமை நீதிபதி செல்வநாதன், முதன்மை சார்பு நீதிபதி ராபர்ட் கென்னடி ரமேஷ், வக்கீல் சங்க தலைவர் குமரன், துணைத்தலைவர் தனலட்சுமி, செயலாளர் கதிர்வேலு உள்பட பலர் கலந்துகொள்கின்றனர்.
17 அமர்வுகள்
நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள், நேரடி வழக்குகள் என 3 ஆயிரத்து 552 வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. அதற்காக புதுச்சேரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் 9 அமர்வுகளும், சட்டப்பணிகள் ஆணைய வளாகம், ஏனாமில் தலா ஒரு அமர்வும், காரைக்காலில் 4 அமர்வுகளும், மாகியில் 2 அமர்வுகளும் என மொத்தம் 17 அமர்வுகள் செயல்பட உள்ளது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story