ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு கொலை மிரட்டல் லாரி டிரைவர் கைது


ரோந்து பணியில் ஈடுபட்ட  போலீசாருக்கு கொலை மிரட்டல் லாரி டிரைவர் கைது
x
தினத்தந்தி 11 March 2022 9:32 PM IST (Updated: 11 March 2022 9:32 PM IST)
t-max-icont-min-icon

ரோந்து பணியில் ஈடுபட்ட போலீஸ்காரர்களை மினிலாரியை ஏற்றி கொலை செய்து விடுவதாக மிரட்டிய டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி
ரோந்து பணியில் ஈடுபட்ட போலீஸ்காரர்களை மினிலாரியை ஏற்றி கொலை செய்து விடுவதாக மிரட்டிய டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

கொலை மிரட்டல்

புதுச்சேரி முதலியார்பேட்டை போலீஸ்காரர்கள் ஜேபி, ஈஸ்வர் ராஜ் ஆகியோர்  கடலூர் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நைனார்மண்டபத்தில் இருந்து புதுவை நோக்கி வந்த மினிலாரி ஒன்று பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் தாறுமாறாக சென்றது. இதனை பார்த்த போலீசார் 2 பேரும் அந்த மினிலாரியை வழிமறித்தனர்.
அப்போது குடிபோதையில் இருந்த டிரைவர், மினிலாரியை தடுத்து நிறுத்த நீங்கள் யார்? உங்கள் 2 பேரையும் லாரியை ஏற்றி கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.

கைது

இதுபற்றி போலீசார் வாக்கி டாக்கி மூலமாக முதலியார்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனே வேறு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள், போலீசாருக்கு மிரட்டல் விடுத்த டிரைவரை மடக்கி பிடித்தனர்.
அவரிடம் விசாரணை நடத்தியதில், புதுச்சேரி நைனார்மண்டபம் நாகம்மாள் நகரை சேர்ந்த பாலாஜி (வயது 33) என்பது தெரியவந்தது. உடனே அவரை போலீசார் கைது செய்து, அந்த மினிலாரியை பறிமுதல் செய்தனர்.

Next Story