கொரோனா தொற்று குறைந்ததால் எல் கே ஜி யு கே ஜி வகுப்புகள் 14 ந்தேதி தொடக்கம்


கொரோனா தொற்று குறைந்ததால் எல் கே ஜி  யு கே ஜி  வகுப்புகள் 14  ந்தேதி தொடக்கம்
x
தினத்தந்தி 11 March 2022 9:42 PM IST (Updated: 11 March 2022 9:42 PM IST)
t-max-icont-min-icon

புதுவையில் வருகிற 14-ந்தேதி முதல் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன.

புதுச்சேரி
புதுவையில் வருகிற 14-ந்தேதி முதல் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன.

பள்ளிகள் மூடல்

கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. தொற்று குறையும் காலங்களில் மட்டும் அவ்வப்போது பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன. மீண்டும் தொற்று அதிகரிக்கும் போது அவை மூடப்பட்டன.
தற்போது 3-வது அலை குறைந்துள்ள நிலையில் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து வருகின்றன. ஆனால் கடந்த 2020-ம் ஆண்டு முதல் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் திறக்கப்படாமல் உள்ளன.

நமச்சிவாயம் ஆலோசனை

அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படாத நிலையில் சில தனியார் பள்ளிகள் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளை திறந்து நடத்தி வருகின்றன. அங்கு வரும் குழந்தைகள் சீருடைக்கு பதிலாக வண்ண உடைகளில் வந்து செல்கின்றனர். அதேநேரத்தில் தமிழகத்தில் மழலையர் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.
அதேபோல் புதுச்சேரியிலும் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளை திறக்க வேண்டும் என்று பொதுமக்களிடம் இருந்து அரசுக்கு கோரிக்கை சென்றன. இதுதொடர்பாக கல்வி அமைச்சர் நமச்சிவாயம், கல்வித்துறை இயக்குனர் ருத்ரகவுடு மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

14-ந்தேதி முதல்...

அப்போது வருகிற 14-ந்தேதி முதல் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளை திறந்து நேரடி வகுப்புகளை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் ருத்ரகவுடு பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் பகுதிகளில் உள்ள எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் வருகிற 14-ந்தேதி முதல் திறக்கப்பட உள்ளன. அப்போது பள்ளிகளின் தலைவர்கள் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
புதுவையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்ட எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் தற்போது தான் திறக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story