திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தங்கத்தேர் உலா இன்று முதல் ரத்து...!


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தங்கத்தேர் உலா இன்று முதல் ரத்து...!
x
தினத்தந்தி 11 March 2022 10:24 PM IST (Updated: 11 March 2022 10:24 PM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தங்கத்தேர் உலா இன்று முதல் ரத்து செய்யப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

திருச்செந்தூர்,

முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் தினமும் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தங்கத்தேர் உலா இன்று முதல் ரத்து செய்யப்படுவதாக கோயில் நிர்வாகம் அaறிவித்துள்ளது. பராமரிப்பு பணி காரணமாக தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Next Story