பள்ளி அருகே கஞ்சா விற்பனை; 3 வாலிபர்கள் கைது
கன்னியாகுமரி அருகே பள்ளி பகுதியில் கஞ்சா விற்ற 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி,
கன்னியாகுமரி மாவட்டம், புதுக்கடை சுற்று வட்டார பகுதிகளில் இளைஞர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை நடப்பதாக எழுந்த புகாரின் பேரில் நேற்று புதுக்கடை சப் இன்ஸ்பெக்டர் எட்வர்ட் பிரைட் மற்றும் போலீசார் தலைமையில் முஞ்சிறை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது முஞ்சிறை அரசு மேல்நிலைப் பள்ளியின் பின்பகுதியில் ஒரு கும்பல் மாணவர்களுக்குக் கஞ்சா பொட்டலம் விற்பது கண்டு பிடிக்கப்பட்டது. போலீசார் சுற்றி வளைத்து அந்த கும்பலை பிடித்தனர். அவர்களிடம் இருந்து 200 கிராம் கஞ்சா பொட்டலம் பறிமுதல் செய்யப்பட்டது.
அவர்களைப் பிடித்து விசாரித்த பொது கஞ்சா விற்றவர்கள் உதச்சிகோட்டை பகுதி தாஸ் மகன் அஸ்டிபர் (21), தென்னாட்டு விளை ஜான்சன் மகன் ஜான் கிறிஸ்டோபர்(18), கீழ்குளம் பகுதி ஜெகன் ஜெபாஸ்கர் மகன் ஜெனிஸ் (20) என தெரிய வந்தது. இதையடுத்து புதுக்கடை போலீசார் மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
Related Tags :
Next Story