முதுநிலை நீட் தேர்வில் அனைத்து பிரிவினருக்கும் கட் ஆஃப் மதிப்பெண் 15% குறைப்பு


முதுநிலை நீட் தேர்வில் அனைத்து பிரிவினருக்கும் கட் ஆஃப் மதிப்பெண் 15% குறைப்பு
x
தினத்தந்தி 12 March 2022 4:18 PM IST (Updated: 12 March 2022 4:18 PM IST)
t-max-icont-min-icon

பொதுப்பிரிவினருக்கு 35%, பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கு 25% ஆகவும் குறைக்க தேசிய தேர்வு வாரியம் உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி,

முதுநிலை நீட் தேர்வுக்கான கட்ஆப் மதிப்பெண்கள் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, பொதுப்பிரிவினருக்கு 35% ஆகவும், பொது மாற்றுத் திறனாளிகளுக்கு 30% ஆகவும், ஒபிசி, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 25% ஆகவும் கட் - ஆஃப் குறைக்கப்பட்டுள்ளது.

குறைக்கப்பட்ட கட் - ஆஃப் அடிப்படையில் புதிய தேர்வு முடிவுகளை வெளியிட்டு, அதன் பட்டியலை அனுப்பி வைக்க வேண்டும். மருத்துவ அறிவியலுக்கான தேசிய தேர்வு வாரியத்துக்கு, மத்திய பொது சுகாதார சேவை இயக்ககம் உத்தரவிடப்பட்டுள்ளது.


Next Story