தமிழகத்தில் மேலும் 105 பேருக்கு கொரோனா; புதிதாக உயிரிழப்பு இல்லை
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை.
சென்னை,
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று வேகமாக குறைந்து வருகிறது. இதனால், கொரோனா கட்டுப்பாடுகள் பெரும்பாலானவை தளர்த்தப்பட்டுள்ளன. தொற்று பாதிப்பு வேகமாக குறைந்து வருவது மக்களுக்கு சற்று நிம்மதியை அளித்து வருகிறது.
அந்த வகையில், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு மேலும் குறைந்துள்ளது. தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது.
அதன் விவரம் வருமாறு: தமிழகத்தில் மேலும் 105 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 34 லட்சத்து 51 ஆயிரத்து 815- ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து மேலும் 265 பேர் குணம் அடைந்துள்ளனர்.
ஆறுதல் அளிக்கும் விதமாக இன்று புதிதாக உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை. கொரோனா தொற்றைக் கண்டறிய கடந்த 24 மணி நேரத்தில் 43 ஆயிரத்து 127 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. சென்னையில் 39 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
Related Tags :
Next Story