அரசு துறைகளில் இளநிலை முதுநிலை எழுத்தர் பணியிடங்கள் நிரப்பப்படும் முதல் அமைச்சர் ரங்கசாமி தகவல்
புதுச்சேரி அரசுத்துறையில் இளநிலை, முதுநிலை எழுத்தர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறினார்.
புதுச்சேரி
புதுச்சேரி அரசுத்துறையில் இளநிலை, முதுநிலை எழுத்தர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறினார்.
ஆசிரியர் பணியிடம்
புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் 148 முன் மழலையர் ஆசிரியர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. முதல்-அமைச்சர் ரங்கசாமி, கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் கலந்து கொண்டு புதுச்சேரியில் 85 பேருக்கும், காரைக்காலில் 63 பேருக்கும் பணி ஆணைகளை வழங்கினர். இதில் பள்ளி கல்வித்துறை இயக்குனர் ருத்ரகவுடு மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
பொதுத்தேர்வு
முன்னதாக முதல்-அமைச்சர் ரங்கசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுச்சேரி அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் படிப்படியாக நிரப்பப்பட்டு வருகிறது. அரசுத்துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பதவி உயர்வும், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்கள் பணி நிரந்தரமும் செய்யப்பட்டு உள்ளனர். அதேபோல் இளநிலை, முதுநிலை எழுத்தர் பணியிடங்களும் விரைவில் நிரப்பபடும். பள்ளிக்கல்வித்துறையில் முன் மழலையர் பள்ளியில் 148 ஆசிரியர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் திங்கட்கிழமை முதல் மழலையர் பள்ளி திறக்கப்பட்டு செயல்படும். மாணவர்களுக்கான சிறப்பு பஸ்கள் இயக்குவதற்காக டெண்டர் விடப்பட்டுள்ளது. விரைவில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். தமிழகத்தை பின்பற்றி புதுச்சேரியில் பொதுத்தேர்வு நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story