ராட்சத எந்திரங்கள் மூலம் பாலம் அமைக்கும் பணி தீவிரம்
புதுவை அண்ணா நகரில் ராட்சத எந்திரங்கள் மூலம் பாலம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
புதுவை அண்ணா நகரில் ராட்சத எந்திரங்கள் மூலம் பாலம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
செயற்கை பாலம்
புதுவை இந்திராகாந்தி சிலை சதுக்க பகுதியில் மழைநேரங்களில் தண்ணீர் தேங்குவதை தடுக்க அண்ணா நகர் பகுதியில் புதுச்சேரி-வில்லியனூர் சாலையின் குறுக்கே செயற்கை பாலம் அமைக்கும் பணி நடக்கிறது. இதற்காக கடந்த 9-ந்தேதி இரவு முதல் போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
அந்த பகுதியில் பள்ளம்தோண்டி செயற்கை கான் கிரீட் பாலத்துக்கான கட்டமைப்புகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. இதைத்தொடர்ந்து பழைய வாய்க்கால் பகுதியில் பழைய கட்டமைப்புகள் அகற்றப்பட்டுள்ளன.
சிமெண்டு படுக்கை
அந்த பகுதியில் குடிநீர் குழாய், மின்சார கேபிள், டெலிபோன் கேபிள் போன்றவற்றை அகற்றி மாற்று ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. தோண்டப்பட்ட பகுதிகளில் ஊற்றெடுக்கும் தண்ணீர் மற்றும் கழிவுநீர் ஆகியன ராட்சத மோட்டார் மூலம் வெளியேற்றப்பட்டு வருகிறது. அங்கு சிமெண்டு படுக்கை அமைப்புகளை அமைக்கும் பணி தற்போது நடந்து வருகிறது. இதற்காக ராட்சத எந்திரங்கள் மூலம் இரவு பகலாக பணிகள் நடந்து வருகிறது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவுக்குள் பணிகளை முடித்து போக்குவரத்தை தொடங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story