தஞ்சை: குடிக்க பணம் இல்லாததால் கூலித் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை..!
தஞ்சை அருகே குடிப்பதற்கு பணம் இல்லாததால் மனமுடைந்த விவசாயக் கூலித் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்டம், கபிஸ்தலம் அருகே உள்ள வீரமாங்குடி தெற்கு தெருவில் வசிப்பவர் பரமசிவம் மகன் சுருதி மன்னவர் (45). இவர் விவசாய கூலி தொழிலாளி. இந்நிலையில் குடிப்பதற்கு பணம் இல்லாததால் மனமுடைந்த அவர் வீட்டில் வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து மயங்கி கிடந்தார்.
இதை கண்ட அருகிலிருந்தவர்கள் அவரை சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சையில் இருந்த கூலித்தொழிலாளி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது மனைவி ராதா கொடுத்த புகாரின் பேரில் கபிஸ்தலம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story