வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.15 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல்; 2 வட மாநில வாலிபர்கள் கைது...!


வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.15 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல்; 2 வட மாநில வாலிபர்கள் கைது...!
x
தினத்தந்தி 13 March 2022 5:00 PM IST (Updated: 13 March 2022 4:51 PM IST)
t-max-icont-min-icon

வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.15 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் 2 வட மாநில வாலிபர்களை கைது செய்துள்ளனர்.

கோவில்பட்டி,

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வ‌.உ‌‌.சி நகரில்‌ உள்ள ஒரு வீட்டில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணனுக்கு தகவல் கிடைத்தது.

உடனடியாக எஸ்.பி. தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் பெட்ரிக்ராஜன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அந்த வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில், 80 மூட்டைகளில் பதுக்கி  வைத்திருந்த  தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்‌.

மேலும் இந்த புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த  வட மாநிலத்தை சேர்ந்த 2 வாலிபர்களையும் கைது செய்தனர். 

இது தொடர்பா போலீசார் கூறுகையில்,

கோவில்பட்டியில் உள்ள ஒரு வீட்டில் நடத்த சோதனையில் ரூ. 15 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. மேலும் அந்த வீட்டில் இருந்த  வட மாநிலத்தை சேர்ந்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். தற்போது அவர்களை இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்து உள்ளனர் என்று தெரிவித்தார். 


Next Story