தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 100-க்கு கீழ் குறைந்தது: 3-வது நாளாக உயிரிழப்பும் இல்லை


Photo Credit: PTI
x
Photo Credit: PTI
தினத்தந்தி 13 March 2022 8:12 PM IST (Updated: 13 March 2022 8:12 PM IST)
t-max-icont-min-icon

தொற்று பாதிப்பைக் கண்டறிய கடந்த 24 மணி நேரத்தில் 41 ஆயிரத்து 933- மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா 3-வது அலை கட்டுக்குள் வந்துள்ளது.  கடந்த சில வாரங்களாகவே தொற்று பாதிப்பு வேகமாக சரிந்து வருவது மக்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது. அந்த வகையில், தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 100-க்கும் கீழ் குறைந்துள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:

தமிழகத்தில் மேலும் 95 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 34 லட்சத்து 51 ஆயிரத்து 910- ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து மேலும் 223- பேர் குணம் அடைந்துள்ளனர். 

கொரோனா பாதிப்பு காரணமாக இன்று உயிரிழப்பு பதிவாகவில்லை. தொற்று பாதிப்பைக் கண்டறிய கடந்த 24 மணி நேரத்தில் 41 ஆயிரத்து 933- மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.  தலைநகர் சென்னையில் 35 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  தமிழகத்தில் 3-வது நாளாக கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு ஏற்படவில்லை என்பது மக்களுக்கு ஆறுதல் அளிப்பதாக உள்ளது. கொரோனா தொற்று பாதிப்புடன் 1,173- பேர் மட்டுமே தற்போது சிகிச்சையில் உள்ளனர்.  

Next Story