“ஆணவ கொலையை தடுக்க தனிச் சட்டம் தேவை” - வி.சி.க. தலைவர் தொல்.திருமாவளவன்
ஆணவ கொலைகளை தடுக்க தமிழக அரசு தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
கோவை,
கோவையில் இன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் நாட்டைக் காக்க அரசியல் கட்சிகள் தங்கள் ஈகோவை விட்டுக்கொடுத்து ஒன்றிணைய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
ஜாதி, மத மோதல்களை தடுக்க தனி உளவுத்துறை அமைப்பை உருவாக்க வேண்டும் என்று தெரிவித்த அவர், ஆணவ கொலைகளை தடுக்க தமிழக அரசு தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். நமது அரசியலமைப்புச் சட்டம் பன்மைத்துவத்தை எடுத்துரைக்கிறது என்று குறிப்பிட்ட அவர், ஒரே தேசம் கலாச்சாரம் என்பது நாட்டை பாழ்படுத்தும் கோட்பாடு என்று கூறினார்.
Related Tags :
Next Story