புதுவை அண்ணா நகரில் பாலம் அமைக்கும் பணிகள் தாமதம்


புதுவை அண்ணா நகரில் பாலம் அமைக்கும் பணிகள் தாமதம்
x
தினத்தந்தி 13 March 2022 11:17 PM IST (Updated: 13 March 2022 11:17 PM IST)
t-max-icont-min-icon

புதுவை அண்ணா நகரில் பாலம் அமைக்கும் பணிகள் தாமதமடைந்து வருகிறது.


புதுவை அண்ணா நகரில் பாலம் அமைக்கும் பணிகள் தாமதமடைந்து வருகிறது.
பாலம் அமைக்கும் பணி
புதுவை அண்ணா நகரில் மழைநீரை வடியவைப்பதற்காக செயற்கையான முறையில் தரைப்பாலம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக செயற்கையாக கான்கிரீட் சிலாப் தயார் செய்யப்பட்டு சாலையில் பள்ளம்தோண்டி பொறுத்தப்பட உள்ளது.
இந்த பணிகளுக்காக புதுவை பஸ் நிலையத்தில் இருந்து இந்திராகாந்தி சிலை நோக்கியும், இந்திராகாந்தி சிலையில் இருந்து பஸ் நிலையம் நோக்கியும் வாகன போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த மார்க்கத்தில் செல்லும் வாகனங்கள் இந்திராகாந்தி சிலையிலிருந்து 100 அடி சாலையில் மரப்பாலம் வழியாக சென்று பஸ்நிலையத்துக்கு செல்கின்றன. அதே பாதையில்தான் பஸ்நிலையத்திலிருந்தும் பஸ்கள் இயக்கப்படுகின்றன.
தாமதம்
இந்த போக்குவரத்து மாற்றம் கடந்த 9-ந்தேதி நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. பாலம் கட்டுமான பணிகளை நேற்றுடன் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் இரவு பகலாக பணிகள் நடந்தும் திட்டமிட்டபடி பாலம் அமைக்கும் பணி நிறைவடையவில்லை. பல்வேறு காரணங்களால் அந்த பணி தாமதமாகிறது.
இந்த பணிகள் முழுமையாக முடிவடைய மேலும் ஓரிரு நாட்கள்  ஆகும் என்று தெரிகிறது. எனவே பஸ் நிலையத்திலிருந்து இந்திராகாந்தி சிலை நோக்கி செல்லும் பாதை பணிகளை மட்டும் முழுமையாக முடித்து நடுவில் உள்ள தடுப்பு கட்டைகளை உடைத்து இருமார்க்கத்திலும் வாகனங்களை இயக்கும் திட்டத்தையும் பொதுப்பணித்துறையினர் வைத்துள்ளனர்.
அதிகாரிகள் திட்டம்
அவ்வாறு செய்யும்பட்சத்தில் வாகன நெருக்கடி காரணமாக கிரேன், பொக்லைன் எந்திரங்களை நிறுத்தி பணிகளை செய்ய இடையூறாக  இருக்கும் என்பதால் மேலும் ஓரிரு நாட்களுக்கு போக்குவரத்தை இப்போது இருப்பதுபோலவே தொடரலமா? என்ற யோசனையும் அதிகாரிகள் மட்டத்தில் உள்ளது.

Next Story