ஜோலார்பேட்டை அருகே ஊதுபத்தி கம்பெனியில் பயங்கர தீ விபத்து..!


ஜோலார்பேட்டை அருகே  ஊதுபத்தி கம்பெனியில் பயங்கர தீ விபத்து..!
x
தினத்தந்தி 14 March 2022 11:15 AM IST (Updated: 14 March 2022 11:04 AM IST)
t-max-icont-min-icon

ஜோலார்பேட்டை அருகே உள்ள ஊதுபத்தி கம்பெனியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சுமார் 30 லட்சம் பொருட்கள் எரிந்து நாசமானது.

திருப்பத்தூர்,

ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி அருகே உள்ள அதி பிரமனூர் கிராமத்தை சேர்ந்தவர் குருசேவ். தற்போது கவுன்சிலராக உள்ள இவர் அதே பகுதியில் 13 ஆண்டுகளாக ஊதுபத்தி கம்பெனி நடத்தி வருகிறார்.

இன்று காலை திடீரென ஊதுபத்தி கம்பெனியில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் அங்கிருந்த மூலப் பொருட்கள் அனைத்தும் பற்றி எரிந்தது. இதுகுறித்து நாட்றம்பள்ளி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் கலைமணி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து தீயை அணைத்தனர். ஆனாலும் அங்கிருந்த ரூ.30 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.

ஊதுபத்தி கம்பெனியில் எப்படி தீ விபத்து ஏற்பட்டது என்பது குறித்து நாட்றம்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 


Next Story