சென்னை மருத்துவமனையில் குஜராத் எம்.எல்.ஏ. உயிரிழப்பு


சென்னை மருத்துவமனையில் குஜராத் எம்.எல்.ஏ. உயிரிழப்பு
x
தினத்தந்தி 14 March 2022 4:15 PM IST (Updated: 14 March 2022 4:15 PM IST)
t-max-icont-min-icon

குஜராத் எம்.எல்.ஏ. கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

சென்னை,

குஜராத் மாநிலம் பிஹிலோடா தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. அனில் ஜோஷியாரா.  70 வயதான இவருக்கு கடந்த ஜனவரி மாதம் கொரோனா பாதிக்கப்பட்டு பின்னர் குணமடைந்தார்.

ஆனால், கொரோனாவில் இருந்து குணமடைந்தபோதும் அனில் ஜோஷியாராவுக்கு கொரோனாவுக்கு பிந்தைய உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டது.

இதனால், அவர் அம்மாநிலத்தில் உள்ள அகமதாபாத்தில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்ததை தொடர்ந்து தமிழ்நாட்டில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எம்.எல்.ஏ. அனிலுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குஜராத் எம்.எல்.ஏ. அனில் ஜோஷியாரா இன்று சிகிச்சை பலனினிறி உயிரிழந்தார். வயது முதிர்வு மற்றும் கொரோனாவுக்கு பிந்தைய உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாத நிலையால் அவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

உயிரிழந்த எம்.எல்.ஏ. அனில் ஜோஷியாரா உடல் சென்னையில் இருந்து அவரது சொந்த ஊரான  குஜராத் மாநிலத்திற்கு கொண்டு செல்லப்பட உள்ளது. 

Next Story