கட்டுப்பாட்டை இழந்து கால்வாயில் கவிழ்ந்த லாரி...!


கட்டுப்பாட்டை இழந்து கால்வாயில் கவிழ்ந்த லாரி...!
x
தினத்தந்தி 14 March 2022 4:30 PM IST (Updated: 14 March 2022 4:20 PM IST)
t-max-icont-min-icon

பள்ளிப்பட்டு அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.

பள்ளிப்பட்டு, 

திருவள்ளூர் மாவட்டம் சோளிங்கர்-பள்ளிப்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் வந்த லாரி ஒன்று ஆர்.கே. பேட்டை பகுதியில் உள்ள பாலதில் விபத்துக்கு உள்ளானது

இந்த விபத்தில் பாலத்தின் தடுப்பு சுவரை உடைத்து கொண்டு ஓடை கால்வாயில் லாரி வாய்ந்து. கால்வாயில் கவிழ்ந்த நிலையில் கிடந்த லாரியில் இருந்த டிரைவர் படுகாயத்துடன் உயிர்தப்பி உள்ளார்.

பின்னர், இந்த விபத்து குறித்து அறிந்த ஆர்.கே. பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து படுகாயம் அடைந்த டிரைவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த விபத்து குறித்து போலீசார் கூறுகையில்,

நாமக்கல்லில் இருந்து பள்ளிப்பட்டுக்கு கரும்பு சக்கை ஏற்றிச் செல்ல காலியாக வந்த லாரி விபத்துக்கு உள்ளாகி உள்ளது. இந்த விபத்தில் லாரியின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளது. ஆனால் லாரியின் டிரைவர் ரவிக்குமார்(36) படுகாயத்துடன அதிர்ஷ்டவசமாக உயிரிதப்பி உள்ளார்.

தற்போது அவர் சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றார். மேலும். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்று தெரிவித்தார். 
 
   

Next Story