மெழுகு சிலை மடியில், குழந்தைகளுக்கு காதுகுத்து...! தம்பியின் ஆசையை நிறைவேற்றிய அக்கா...!


மெழுகு சிலை மடியில், குழந்தைகளுக்கு காதுகுத்து...! தம்பியின் ஆசையை நிறைவேற்றிய அக்கா...!
x
தினத்தந்தி 14 March 2022 4:22 PM IST (Updated: 14 March 2022 4:27 PM IST)
t-max-icont-min-icon

சாலை விபத்தில் இறந்த தம்பியின் ஆசையை அக்கா நிறைவேற்றியுள்ளார்.

ஒட்டன்சத்திரம்,

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டித்துரை. இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சாலை விபத்து ஒன்றில் உயிரிழந்தார். இந்நிலையில் இவரது மூத்த சகோதரியின் குழந்தைகளுக்கு காதணி விழா நடத்த குடும்பத்தார் முடிவு செய்துள்ளனர். இதில் இளைஞர் பாண்டித்துரை பங்கேற்க வேண்டும் என விரும்பினர். 

அதன்படி, பாண்டித்துறை குடும்பத்தார் அவரது உருவ அமைப்பில் மெழுகு சிலை ஒன்றை வாங்கி உள்ளனர். இதனையடுத்து, காதணி விழாவின் போது இளைஞர் பாண்டித்துரையின் மெழுகு சிலையில் அமர வைத்து அவரது மூத்த சகோதரியின் குழந்தைகளுக்கு அவரது குடும்பத்தார் காதுகுத்தினர். இந்த நெகிழ்ச்சியான சம்பவம் அங்குள்ளவர்களை ஆனந்த கண்ணீரில் ஆழ்த்தியது. 

இதுகுறித்து இளைஞர் பாண்டித்துரையின் தாய் கூறும்போது, தனது அக்கா குழந்தைகளுக்கு தனது மடியில் அமரவைத்து காதணி விழா நடத்த வேண்டும் என்பதுதான் தனது மகனின் ஆசை என்றும் அதனை நிறைவேற்றும் வகையிலே இந்த காதணி விழாவை நடத்தி உள்ளதாகவும் தெரிவித்து உள்ளார்.

Next Story