தமிழக உரிமைகளை விட்டுக் கொடுக்க முதல்-அமைச்சர் தயாராகிவிட்டார்; அண்ணாமலை குற்றச்சாட்டு


தமிழக உரிமைகளை விட்டுக் கொடுக்க முதல்-அமைச்சர் தயாராகிவிட்டார்; அண்ணாமலை குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 14 March 2022 8:30 PM IST (Updated: 14 March 2022 8:28 PM IST)
t-max-icont-min-icon

தமிழக உரிமைகளை விட்டுக் கொடுக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தயாராகிவிட்டார் என்று பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்

அயோத்தியாபட்டணம், 

சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டணம் தனியார் திருமண மண்டபத்தில் சேலம் கிழக்கு மாவட்ட பா.ஜ.க, பொதுச் செயலாளர் குமார் இல்லத் திருமண விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு மணக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து பத்திரிக்கையாளர்களிடம் அவர் கூறுகையில்,

கர்நாடகா மேகதாது அணைக்காக, கர்நாடகா காங்கிரஸ் , கட்சியைச் சேர்ந்த சிவக்குமார், சித்தராமையா பாதை யாத்திரை எடுத்துக் கொண்டுள்ளனர்.

இதற்கு தமிழக காங்., சார்பில் கண்டன குரல் எழுப்பவில்லை. கூட்டணியில் இருக்கும் முதல்வர் ஸ்டாலினும் கண்டனம் தெரிவிக்கவில்லை. மேகதாது அணை விவகாரத்தில் தமிழக காங்கிரஸ் கள்ள தொடர்பு வைத்துள்ளது. இதைத்தாண்டி, தமிழக உரிமைகளை விட்டுக் கொடுப்பதற்கு முதல்-அமைச்சர் ஸ்டாலின் தயாராகிவிட்டார். 

கர்நாடகாவில் ஹேமாவதி கபினி அணையை முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி ஆட்சியில்தான் உரிமையை விட்டுக்கொடுத்து, அணைகட்டப்பட்டது. தற்போது அவரது மகன் ஸ்டாலின் முதல்-அமைச்சராக இருக்கும்போது, மேகதாது அணையை விட்டுக் கொடுக்கிறார்.

இதுமட்டுமின்றி, கேரளாவில் முல்லைப் பெரியாறு உரிமையும் விட்டுக் கொடுத்துள்ளனர். அதற்காக, பா.ஜ.., சார்பில் தேனி மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம் செய்துள்ளோம். தி.மு.க., அரசு காங்., கம்யூனிஸ்ட்., உடன் கூட்டணியில் மட்டும் இருந்து, தேர்தலில் வெற்றி பெற வேண்டும். அதற்காக, தமிழகத்தின் உரிமையை விட்டுக் கொடுத்து காரணம் காட்டி வருகின்றனர். இவ்வாறு அவர் தெரித்தார்.

Next Story