விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 14 March 2022 8:37 PM IST (Updated: 14 March 2022 8:37 PM IST)
t-max-icont-min-icon

காரைக்காலில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

காரைக்காலில்  விவசாய  தொழிலாளர் சங்கத்தினர் பஸ் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர். விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் தங்கையன் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் மதியழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
விவசாய தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் நிவாரணம் வழங்க அரசு முன்வரவேண்டும். விவசாயிகளின் குழந்தைகளுக்கு அரசு வேலையில் முன்னுரிமை வழங்க வேண்டும். விவசாய தொழிலாளர்களுக்கு காப்பீட்டு திட்டம் கொண்டுவர வேண்டும். வாரியம் அமைக்க வேண்டும். மழை கோட், குடை, கொசு வலை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.


Next Story