எழிலகம் கட்டிடத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை: கணக்கில் வராத ரூ.35 லட்சம் பறிமுதல்...!


எழிலகம் கட்டிடத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை: கணக்கில் வராத ரூ.35 லட்சம் பறிமுதல்...!
x
தினத்தந்தி 14 March 2022 8:55 PM IST (Updated: 14 March 2022 8:55 PM IST)
t-max-icont-min-icon

எழிலகத்தில் உள்ள போக்குவரத்து துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை இன்று சோதனை நடத்தியது.

சென்னை,

சென்னை சேப்பாக்கம் எழிலகம் கட்டிடத்தில் போக்குவரத்து துறை ஆணையரக அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த ஆணையரக அலுவலகத்தில் இணை ஆணையரக மற்றும் துணை ஆணையரக அலுவலகங்கள் இயங்கி வருகிறது.

இதில் துணை ஆணையர் நடராஜன் என்பவரின் அலுவகத்தில் தான் சோதனை நடைபெற்றது. பல லட்சம் ரூபாய் கையெழுத்து பெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இந்த திடீர் சோதனை நடைபெற்றது. சோதனையின் போது அவரது அலுவலகத்தில் உள்ள பணம் எண்ணும் எந்திரம் இரண்டை எடுத்து சென்று சோதனை செய்தனர். 

இந்த நிலையில், எழிலகத்தில் உள்ள போக்குவரத்து ஆணையர் நடராஜன் அலுவலகத்தில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் கணக்கில் வராத ரூ.35 லட்சம் ரொக்க பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றியுள்ளனர். அலுவலகத்தில் உள்ள 30 உதவியாளர்களிடம் இருந்து கணகாணிப்பாளர் பதவி உயர்வுக்காக ரூ.5 லட்சம் பெறுவதாக புகார் எழுந்ததை அடுத்து லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த சோதனையின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து லஞ்ச ஒழிப்பு துறையினர் ஆலோசனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

சென்னை துணை போக்குவரத்து அலுவலர் அலுவலகத்தில் ரூபாய் 35 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story