தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் பறிமுதல்


தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 14 March 2022 11:58 PM IST (Updated: 14 March 2022 11:58 PM IST)
t-max-icont-min-icon

வில்லியனூர் அருகே தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்கள் விற்றவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்த போதை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்கள் அருகில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு புகார்கள் சென்றன. அதன்பேரில் புதுச்சேரி தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு ஜிந்தா கோதண்டராமன் உத்தரவின்பேரில் வில்லியனூர் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் தலைமையில் மங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் கீர்த்தி மற்றும் போலீசார் கல்வி நிலையங்கள் அருகில் உள்ள கடைகளில் திடீர் சோதனை நடத்தினர்.  அப்போது வில்லியனூர் சுல்தான்பேட்டையை சேர்ந்த அகமது சாலிக் (வயது 45) என்பவர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை திருக்காஞ்சி பகுதி கடைகளுக்கு விற்பனை செய்ய கடத்திச்சென்றது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.1 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.`

Next Story