புகார் கொடுக்க போலீஸ் நிலையம் சென்றபோது காரை ஏற்றி பூசாரி படுகொலை


புகார் கொடுக்க போலீஸ் நிலையம் சென்றபோது காரை ஏற்றி பூசாரி படுகொலை
x
தினத்தந்தி 15 March 2022 1:12 AM IST (Updated: 15 March 2022 1:12 AM IST)
t-max-icont-min-icon

புகார் கொடுக்க போலீஸ் நிலையம் சென்றபோது, காரை ஏற்றி கோவில் பூசாரி கொலை செய்யப்பட்டார்.

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டம் பந்தல்குடி வெள்ளையாபுரம் தெருவை சேர்ந்தவர் செந்தில்(வயது 46). கோவில் பூசாரி. செந்திலின் உறவுக்கார பெண்ணுடன், பந்தல்குடி லிங்காபுரத்தை சேர்ந்த பெத்துக்குமார்(27) என்பவர் அடிக்கடி பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த செந்தில், திருமணமான பெண்ணிடம் எப்போதும் ஏன் பேசி கொண்டு இருக்கிறாய் என பெத்துக்குமாரை கண்டித்தார். இதனால் அவர்கள் 2 பேருக்கும் தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் இதுதொடர்பாக இருவருக்கும் மோதல் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதில் காயமடைந்த செந்தில் பந்தல்குடி போலீசில் புகார் அளிப்பதற்காக இருசக்கர வாகனத்தில் போலீஸ் நிலையம் சென்றுள்ளார்.

கார் ஏற்றி கொலை

போலீசில் புகார் அளித்தால் சிக்கலாகி விடும் என கருதிய பெத்துக்குமார், இதுபற்றி அவரது தம்பி விஜயகுமார்(25), தாயார் விஜயலட்சுமி மற்றும் நண்பர்கள் பாண்டியராஜன்(28), ராஜபாண்டி(27), கோபிநாதன்(26) ஆகியோரிடம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அவர்கள் 6 பேரும் போலீஸ் நிலையம் சென்ற பூசாரி செந்திலை காரில் சென்று வழியிலேயே மடக்கி பிடித்து தாக்கினர். அப்போது, அவர் தனது இருசக்கர வாகனத்தில் ஏறி தப்பி செல்ல முயன்றார். உடனே பெத்துக்குமார் காரில் ஏறி அவரை நோக்கி வேகமாக ஓட்டினார். இதில் செந்தில் மீது கார் ஏறியதால் படுகாயம் அடைந்து அவர் பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக பந்தல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து பொத்துக்குமார் உள்பட 6 பேரையும் கைது செய்தனர்.

Next Story