மயிலாப்பூர் கோவில் தெப்பக்குளத்தில் 3 சிலைகள் மீட்பு
சென்னை மயிலாப்பூர் கோவில் தெப்பக்குளத்தில் தீயணைப்பு வீரர்கள் நடத்திய தேடுதல் வேட்டையில் 3 சிலைகள் சிக்கியது.
சென்னை,
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் கடந்த 2004-ம் ஆண்டு மயில் சிலை காணாமல் போனது. இதுதொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் தற்போது இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நிலுவையில் இருந்து வருகிறது.
இந்த வழக்கில் போலீஸ் தரப்பில் ஆஜரான அரசு தரப்பு வக்கீல், காணாமல் போன சிலை கபாலீஸ்வரர் கோவில் தெப்பக்குளத்தில் இருப்பதாக தெரியவந்துள்ளது என ஐகோர்ட்டில் தெரிவித்தார்.
இதையடுத்து மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் தெப்பக்குளத்தில் நேற்று (திங்கட்கிழமை) காலை 9.30 மணி முதல் காணாமல் போன சிலையை தேடும் பணி நடைபெற்றது. இந்த தேடுதல் வேட்டையில் மாவட்ட தீயணைப்பு அதிகாரிகள் முகமது செய்யது ஷா, சரவணன் தலைமையில் 80-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், 20-க்கும் மேற்பட்ட சிறப்பு நீச்சல் பயிற்சி தீயணைப்பு துறை கமாண்டோக்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
3 சிறிய சிலைகள்
மாலை வரை நடைபெற்ற இந்த தேடுதல் 6 படகுகள் மூலமும், நவீன நீர்மூழ்கி நீச்சல் உடை கொண்டும் தீயணைப்பு வீரர்கள் கோவில் தெப்பக்குளத்தில் தேடுதல் பணி மேற்கொண்டனர். தொடர்ந்து பாதாள கொறடு கொண்டும் தெப்பக்குளத்தின் அடிப்பாகத்தில் தேடுதல் நடத்தினர். இந்த தேடுதல் பணியில் இரட்டை பாம்பு சிலை, பிள்ளையார் சிலை உள்பட 3 சிறிய சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.
ஆனால் நேற்று கண்டெடுக்கப்பட்ட சிலைகளில் தேடப்படும் மயில் சிலை இல்லை. இதையடுத்து தொடந்து 2-வது நாளாக இன்று தேடுதல் பணி நடத்த தீயணைப்பு துறையினர் திட்டமிட்டுள்ளதாக உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story