முன்னாள் அமைச்சர் வேலுமணி குற்றமற்றவர் என நிரூபிப்பார்: ஆர்.பி.உதயகுமார் அறிக்கை
அரசியல் காழ்ப்புணர்ச்சியால் மேற்கொண்ட நடவடிக்கைக்கு வேலுமணி குற்றமற்றவர் என நிரூபிப்பார் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மதுரை,
முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தற்போது கேரள அரசு புதிய அணை கட்ட முயன்று வருகிறது, ஆனால் தமிழகத்தின் இத்துறையின் மூத்த அமைச்சர் தனி அக்கறை செலுத்தவில்லை. மேலும் முதல் அமைச்சர் முல்லைப் பெரியாறு பிரச்சினை குறித்து வாய் திறக்காதது கவலை அளிக்கிறது.
எதிர்கால சந்ததியினர் வாழ்வாதாரம் தான் இந்த முல்லை பெரியாறு ஆகும். விளைநிலங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று தென் மாவட்ட விவசாயிகள் அதிக கவலை கொண்டுள்ளனர். ஆகவே விவசாயிகளை காப்பாற்றிடவும் தமிழகத்தின் ஜீவாதார உரிமைகளை நிலைநாட்டிட அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடந்த ஆட்சி காலத்தில் உள்ளாட்சித் துறையில் பல விருதுகளைப் பெற்றுத் தந்தது மட்டுமல்லாது மத்திய அரசின் மூலம் பல்வேறு விருதுகளைப் பெற்றுத் தந்து 38 மாவட்டங்களில் குடிநீர் மேம்பாட்டு திட்ட பணிகளையும், கிராம இணைப்பு சாலைகளையும் உருவாக்கி உள்ளாட்சித் துறையில் அமைச்சராக எஸ் பி வேலுமணி சிறப்பாக செயல்பட்டார்.
தற்போது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பழிவாங்கும் நடவடிக்கையில் அரசு செயல்பட்டு வருகிறது. தேர்தல் காலத்தில் 534 தேர்தல் வாக்குறுதி கொடுத்தனர். அதன் மீது அக்கறை செலுத்தினால் மக்கள் வரவேற்பு அளிப்பார்கள். ஆகவே அரசியல் காழ்புணர்ச்சியை விட்டுவிட்டு மக்கள் மீது அரசு முழு அக்கறை செலுத்த வேண்டும். நிச்சயம் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி சட்டரீதியாக எதிர்கொண்டு குற்றமற்றவர் என நிரூப்பிபார் என்று கூறியுள்ளார்.
Related Tags :
Next Story