துணை மருத்துவ சேர்க்கையில் விதிமீறல்; தனியார் மருத்துவ கல்லூரிகள் மீது நடவடிக்கை


துணை மருத்துவ சேர்க்கையில் விதிமீறல்; தனியார் மருத்துவ கல்லூரிகள் மீது நடவடிக்கை
x
தினத்தந்தி 15 March 2022 4:57 PM IST (Updated: 15 March 2022 4:57 PM IST)
t-max-icont-min-icon

விதிமீறல்களில் ஈடுபட்ட தனியார் மருத்துவ கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்க மருத்துவ கல்வி இயக்குனரகம் முடிவு செய்துள்ளது.

சென்னை,

அண்மையில் துணை மருத்துவ படிப்புகளுக்கு ஆன்லைன் வழியாக கலந்தாய்வு நடத்தப்பட்டு மாணவர்களுக்கு சேர்க்கை உத்தரவுகள் வழங்கப்பட்டன. எனினும் நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட சில மாவட்டங்களைச் சேர்ந்த தனியார் மருத்துவ கல்லூரிகளில் சேர்க்கை உத்தரவு பெற்ற மாணவர்களை கல்லூரியில் சேர்க்காமல் அனுமதி மறுத்தது குறித்து மருத்துவ கல்வி இயக்குனர் அலுவலகத்திற்கு புகார்கள் வந்துள்ளன. 

மேலும் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக அளவில் கட்டணம் வசூலிப்பது குறித்தும் புகார்கள் வந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட கல்லூரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இது தொடர்பான அறிக்கை தமிழக அரசுக்கு விரைவில் அனுப்பப்படும் என்றும் இயக்குனரக வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story