காரைக்கால் துறைமுகத்தில் லாரி திருடிய வாலிபர் கைது
காரைக்கால் துறைமுகத்தில் லாரி திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
காரைக்கால்
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்தவர் பிரபாகரன். இவருக்கு சொந்தமான லாரியை அதே பகுதியை சேர்ந்த ஜான்பாண்டியன் என்பவர் ஓட்டி வருகிறார். இந்தநிலையில் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்துக்கு அவர் லாரியை ஓட்டி வந்தார்.
அங்கு மீன் ஏற்றுவதற்கு தாமதம் ஆனதால் லாரியை துறைமுகத்தில் விட்டு விட்டு அருகில் உள்ள நாகை மாவட்ட லாரி அலுவலகத்திற்கு ஜான்பாண்டியன் சென்றதாக கூறப்படுகிறது. மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது, லாரியை திருடி சென்றது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில் நிரவி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதில் திருவாரூர் பகுதியில் நின்று இருந்த அந்த லாரியை போலீசார் மீட்டு காரைக்காலுக்கு கொண்டு வந்தனர்.
தொடர்ந்து விசாரித்ததில் லாரியை திருடியது திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அடுத்த மாநகரம் மேலத்தெருவை சேர்ந்த அய்யப்பன் (வயது 28) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story