திருவண்ணாமலையில் 2 ஆண்டுக்கு பிறகு கிரிவலம் செல்ல அனுமதி
திருவண்ணாமலையில் 2 ஆண்டுக்கு பிறகு கிரிவலம் செல்ல அனுமதி பக்தர்கள் மகிழ்ச்சி.
திருவண்ணாமலை,
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையில் பக்தர்கள் பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து தொற்று குறையாமல் இருந்ததால் பல மாதங்களாக பக்தர்கள் பவுர்ணமி அன்று கிரிவலம் செல்ல முடியாமல் தவித்து வந்தனர். இந்த நிலையில் 2 ஆண்டுக்கு பிறகு இந்த மாதம் பக்தர்கள் பவுர்ணமி கிரிவலம் செல்ல திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. அதன்படி பவுர்ணமி தினங்களான நாளை (வியாழக்கிழமை), நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) ஆகிய நாட்களில் பக்தர்கள் கிரிவலம் செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2 ஆண்டுகளுக்கு பிறகு கிரிவலத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Tags :
Next Story