புழல் சிறையில் இருந்து பேரறிவாளன் ஜாமீனில் விடுதலை


புழல் சிறையில் இருந்து பேரறிவாளன் ஜாமீனில் விடுதலை
x
தினத்தந்தி 15 March 2022 8:54 PM GMT (Updated: 15 March 2022 8:54 PM GMT)

புழல் சிறையில் இருந்து பேரறிவாளன் ஜாமீனில் விடுதலை.

செங்குன்றம்,

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளன் சுமார் 31 ஆண்டுகள் சிறையில் இருந்து வந்த நிலையில், அவரை விடுதலை செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு கடந்த 12 ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிலையில், சில தினங்களுக்கு முன்பு சுப்ரீம் கோர்ட்டு பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கியது.

சிறை வாசலில் தனது மகனின் ஜாமீன் குறித்து மகிழ்ச்சியுடனும் நெகிழ்ச்சியுடனும் அவரது தாயார் அற்புதம்மாள் பேசும்போது, ‘நீதிக்கான 31 ஆண்டுகால நீண்ட போராட்டத்தில் இந்த ஜாமீன் ஒரு இடைக்கால நிவாரணம் மட்டுமே. என் மகன் பேரறிவாளன் உள்பட அனைவரும் முழுமையான விடுதலையை பெறுகின்றவரை, எங்கள் சட்டப்போராட்டம் தொடரும் என்றார்.

இதையடுத்து புழல் ஜெயிலில் இருந்து விடுதலை செய்யப்பட்ட பேரறிவாளன், அவரது தாயருடன் காரில் புறப்பட்டு சென்றார்.

Next Story