வரும் 27-ந்தேதி முதல் திருச்சியில் இருந்து ஐதராபாத் வழியாக டெல்லிக்கு மீண்டும் விமான சேவை
வரும் 27-ந்தேதி முதல் திருச்சியில் இருந்து ஐதராபாத் வழியாக புதுடெல்லிக்கு மீண்டும் விமான சேவை தொடங்குகிறது.
செம்பட்டு,
திருச்சியில் இருந்து புதுடெல்லிக்கு ஐதராபாத் வழியாக இண்டிகோ விமானம் இயக்கப்பட்டு வந்தது. கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இந்த விமான சேவை மீண்டும் வருகிற 27-ந்தேதி முதல் இயக்கப்பட உள்ளது.
இந்த விமானம் தினந்தோறும் காலை 9.10 மணிக்கு திருச்சி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு 10.55 மணிக்கு ஐதராபாத் விமான நிலையத்தை சென்றடைகிறது. மீண்டும் ஐதராபாத் விமான நிலையத்தில் இருந்து 11.40 மணிக்கு புறப்பட்டு நண்பகல் 1.55 மணிக்கு புதுடெல்லியை சென்றடைகிறது. புதுடெல்லியில் இருந்து திருச்சிக்கு மதியம் 12.15 மணிக்கு புறப்படும் விமானம் மதியம் 2.25 மணிக்கு ஐதராபாத் விமான நிலையத்தை வந்தடைகிறது.
மீண்டும் ஐதராபாத்தில் இருந்து மாலை 3.40 மணிக்கு புறப்பட்டு மாலை 5.10 மணிக்கு திருச்சி விமான நிலையத்தை வந்தடையும் என இண்டிகோ விமான நிலைய வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story