புத்தகப் பூங்கா அறிவிப்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வைரமுத்து நன்றி
புத்தகப் பூங்கா அமைக்கப்படும் என்ற முதல்-அமைச்சரின் அறிவிப்புக்கு கவிஞர் வைரமுத்து நன்றி தெரிவித்துள்ளார்.
சென்னை,
அனைத்து நூல்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் நோக்கத்தில் மாபெரும் புத்தகப் பூங்கா அமைக்கப்படும் என்று தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கும் விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிவித்தார்.
முதல்-அமைச்சரின் இந்த அறிவிப்புக்கு கவிஞர் வைரமுத்து நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,
புத்தகப் பூங்கா அறிவிப்புக்கு மாண்புமிகு முதல்வருக்கு மனமார்ந்த நன்றி!
புத்தகப் பூங்காவுக்கு முத்தமிழறிஞர் கலைஞரின் திருப்பெயர் சூட்டவேண்டுமென்ற கோரிக்கையை நான் முதல்வருக்கு முன் வைக்கிறேன்.
புத்தகப் பூங்காவால் அறிவுலகம் மகிழும் கலைஞர் பெயர் சூட்டினால் தமிழ் உலகம் புகழும்” என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
புத்தகப் பூங்கா அறிவிப்புக்கு
— வைரமுத்து (@Vairamuthu) March 16, 2022
மாண்புமிகு முதல்வருக்கு
மனமார்ந்த நன்றி
புத்தகப் பூங்காவுக்கு
முத்தமிழறிஞர் கலைஞரின்
திருப்பெயர் சூட்டவேண்டுமென்ற
கோரிக்கையை
நான் முதல்வருக்கு
முன் வைக்கிறேன்
புத்தகப் பூங்காவால்
அறிவுலகம் மகிழும்
கலைஞர் பெயர் சூட்டினால்
தமிழ் உலகம் புகழும்
Related Tags :
Next Story