சொத்து தகராறு: மனைவியை தாக்கிவிட்டு தாய் தந்தையையும் அரிவாளால் வெட்டியவர் கைது...!


சொத்து தகராறு: மனைவியை தாக்கிவிட்டு தாய் தந்தையையும் அரிவாளால் வெட்டியவர் கைது...!
x
தினத்தந்தி 16 March 2022 1:30 PM IST (Updated: 16 March 2022 1:21 PM IST)
t-max-icont-min-icon

சொத்து தகராறில் மனைவியை தாக்கிவிட்டு தாய தந்தையையும் அரிவாளால் வெட்டியவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இட்டமொழி, 

நெல்லை மாவட்டம் பரப்பாடி அருகே உள்ள காத்த நடப்பு பகுதியை சேர்ந்தவர் நாகராஜன்(வயது 70). இவரது மனைவி முத்துலட்சுமி(60).இவர்களுக்கு ஒரு மகளும், 2 மகன்களும் உள்ளனர். மூத்த மகன் முத்து பாண்டி(37). இவருக்கு திருமணமாகி மோகனசுந்தரி (36) என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.

தந்தை நாகராஜன் வெளிநாட்டில் வேலை செய்துவிட்டு பின்னர் ஊரில் விவசாயம் செய்து வந்தார். மகன் முத்து பாண்டி வேலைக்கு எதுவும் போகாமல் அடிக்கடி குடித்துவிட்டு ஊதாரியாக சுற்றி வந்ததாக கூறப்படுகிறது.

முத்து பாண்டி சொத்துக்களை பிரித்து தர தந்தை நாகராஜனிடம் கேட்டுள்ளார். இதனால் தந்தை நாகராஜன் வீட்டை முத்து பாண்டி பெயருக்கு எழுதி கொடுத்துள்ளார். வீட்டை எழுதி வாங்கிய மகன் முத்து பாண்டி தாய், தந்தையை வீட்டை விட்டு விரட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் தந்தை நாகராஜன் அருகே உள்ள தனக்கு சொந்தமான மற்றொரு இடத்தில் தங்கியுள்ளார். இந்த நிலையில் அந்த இடத்தையும்  தன் பெயருக்கு எழுதி கைக்க  கோரி தந்தையிடம் முத்து பாண்டி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

அப்போது வேலைக்கு செல்லாமல் ஊதாரியாக சுற்றிவந்த முத்து பாண்டியை மனைவி மோகனசுந்தரியும் தந்தை நாகராஜனும் கண்டித்துள்ளனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த முத்து பாண்டி இன்று அதிகாலையில் தூங்கிக்கொண்டிருந்த தனது மனைவி மோகனசுந்தரி தலையில் கல்லை தூக்கி போட்டுள்ளார்.

இதில் ஆத்திரம் தீராத முத்துப்பாண்டி அருகில் உள்ள வீட்டில் தூங்கி கொண்டிருந்த நாகராஜன், தாய் முத்துலட்சுமி ஆகியோரையும் அரிவாளால் வெட்டியுள்ளார். 

பின்னர் அங்கிருந்து சென்ற முத்து பாண்டி விஜயநாராயணம் போலீஸ் நிலையத்திற்கு சென்று நடந்ததை குறி சரணடைந்தார்.

இதனை அறிந்த அதிர்ச்சி அடைந்த போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு உயிரருக்கு போராடிக் கொண்டிருந்த 3 பேருந்தை மீட்டு பாளைங்கோட்டை கிரவுண்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் 3 பேருக்கும் மருத்துவர்கள் சிகிச்சை அளித்துவருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து நாங்குநேரி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா வழக்குப்பதிவு செய்து முத்து பாண்டியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

Next Story