பட்டப்பகலில் மூதாட்டியிடம் ரூ. 10 ஆயிரத்தை பறித்து சென்ற கொள்ளையர்கள்...!
வாணியம்பாடி அருகே பட்டப்பகலில் மூதாட்டியிடம் ரூ. 10 ஆயிரத்தை கொள்ளையர்கள் பறித்து சென்றுள்ளனர்.
வாணியம்பாடி,
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மதனாஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் மூதாட்டி வசந்தா (வயது 65). பிள்ளைகள் இல்லாத நிலையில் கணவரை பிரிந்து வாழ்து வருகிறார். பிழைப்புக்காக வாணியம்பாடி பஜார் வீதியில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில் இன்று காலை வாணியம்பாடியில் உள்ள கணியம்பாடி பஜார் வீதி பகுதியில் சாலையோரத்தில் புளி மற்றும் காய்கறிகள் மூதாட்டி வசந்தா விற்றுக் கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் மூதாட்டி சுருக்குப் பையில் வைத்திருந்த ரூ.10 ஆயிரத்தை பறித்துச் சென்றுள்ளனர்.
இதனால் மூதாட்டி வசந்தா அலறியடித்து கூச்சலிட்டு உள்ளார். இதனை கண்ட அக்கம் பக்கத்து அந்த நபர்களை பிடிக்க முயன்றனர். ஆனால் அதற்குள் அவர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த வாணியம்பாடி போலீசார், சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி காட்சி பதிவுகளை கொண்டு தப்பியோடிய 3 பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story