காரைக்காலில் அடுத்தடுத்து துணிகரம் 3 கடைகளில் பூட்டை உடைத்து திருட்டு நள்ளிரவில் கைவரிசை காட்டியவர் கைது
காரைக்காலில் 3 கடைகளின் பூட்டை உடைத்து நள்ளிரவில் கைவரிசை காட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
காரைக்கால்
காரைக்காலில் 3 கடைகளின் பூட்டை உடைத்து நள்ளிரவில் கைவரிசை காட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
பூட்டை உடைத்து திருட்டு
காரைக்கால் திருநள்ளாறு சாலை ஒழுங்குமுறை விற்பனை கூடம் அருகே, இஸ்மாயில் என்பவருக்கு சொந்தமான கடை மற்றும் அதே வரிசையில் அடுத்தடுத்து மளிகை மற்றும் கோழிக்கடை உள்ளது.
இரவு வியாபாரத்தை முடித்துக் கொண்டு அந்த கடைகளை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றுவிட்டனர். நேற்று காலை வழக்கம் போல் கடைகளை திறக்க வந்த போது, ஷட்டர்கள் உடைக்கப்பட்டு பணம் மற்றும் பொருட்கள் திருடப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து கடைக்காரர்கள் 3 பேரும் புகார் தெரிவித்தனர். அதன்பேரில் காரைக்கால் நகர போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கடை முன்பு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர்.
வாலிபர் கைது
அப்போது, நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் கடையின் பூட்டை உடைத்து ஷட்டரை திறந்து உடலை வளைத்து உள்ளே சென்று திருடி விட்டு தப்பிச் செல்வது பதிவாகி இருந்தது. இதை வைத்து போலீசார் விசாரணையை முடுக்கி விட்டனர். இதில் கடை அருகே வசிக்கும் ரகுமான் (வயது21) என்பவர், கடைகளின் பூட்டை உடைத்து ஷட்டரை திறந்து, கை வரிசை காட்டி இருப்பது தெரியவந்தசெய்தது .
இதையடுத்து காரைக்கால் நகர பகுதியில் பதுங்கி இருந்த ரகுமானை, போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.5 ஆயிரம் பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Related Tags :
Next Story