உரிமமில்லா நாட்டுத்துப்பாக்கியால் பறவைகளை வேட்டையாடிய 2 பேர் கைது


உரிமமில்லா நாட்டுத்துப்பாக்கியால் பறவைகளை வேட்டையாடிய 2 பேர் கைது
x
தினத்தந்தி 16 March 2022 6:57 PM IST (Updated: 16 March 2022 6:57 PM IST)
t-max-icont-min-icon

நாட்டுத்துப்பாக்கியால் பறவைகளை வேட்டையாடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஆரணி

நாட்டுத்துப்பாக்கியால் பறவைகளை வேட்டையாடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

சந்தவாசல் அடுத்த விளாங்குப்பம் சுடுகாட்டு பகுதியில் இருவர் பறவைகளை நாட்டுத் துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடுவதாக கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமோன்ராஜா, சந்தவாசல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் ஆகியோருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் போலீசார் மேற்கண்ட பகுதியில் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். விளாங்குப்பம் சுடுகாட்டு பகுதி அருகே கட்டிட மேஸ்திரியான விளாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ராஜா (வயது 29), கேளூர் கிராமத்தைச் சேர்ந்த சென்ட்ரிங் தொழிலாளி பழனி (39) ஆகியோர் உரிமமில்லா நாட்டுத்துப்பாக்கியை வைத்திருந்தனர். 

இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து உரிமமில்லா நாட்டுத் துப்பாக்கி, மோட்டார்சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

---
Image1 File Name : 9534231.jpg
----
Reporter : S. VIJAYAKUMAR  Location : Vellore - ARANI

Next Story