சீமைக்கருவேல மரத்தை அகற்ற கொள்கை முடிவு ஐகோர்ட்டில் அரசு தகவல்


சீமைக்கருவேல மரத்தை அகற்ற கொள்கை முடிவு ஐகோர்ட்டில் அரசு தகவல்
x
தினத்தந்தி 17 March 2022 12:33 AM IST (Updated: 17 March 2022 12:33 AM IST)
t-max-icont-min-icon

சீமைக்கருவேல மரத்தை அகற்ற கொள்கை முடிவு ஐகோர்ட்டில் அரசு தகவல்.

சென்னை,

நிலத்தடி நீரை உறிஞ்சும் சீமைக்கருவேல மரங்களை அகற்றக்கோரி ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்குகளை விசாரித்த ஐகோர்ட்டு, மாநிலம் முழுவதும் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு தரப்பில், ‘தமிழகத்தைச் சேர்ந்த ஐ.எப்.எஸ். அதிகாரிகள் அடங்கிய குழு ராஜஸ்தான், மத்தியபிரதேசம், குஜராத், கேரளா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களுக்குச் சென்று சீமைக் கருவேலம் மரம் குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

இந்த மாநிலங்களில் 50 ஏக்கர் வீதம் பிரிக்கப்பட்டு, ஒப்பந்ததாரர்களை கொண்டு சீமைக்கருவேல மரங்கள் எந்திரங்கள் மூலமாக அப்புறப்படுத்தப்படுகின்றன. தொடர்ச்சியாக அப்பகுதியை கண்காணித்து சீமைக்கருவேல மரங்கள் வளராமல் பார்த்துக்கொள்ளப்படுகிறது. சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்ட இடங்களில் நாட்டு மரங்கள் நடப்படுகின்றன.

இதே நடைமுறையை தமிழ்நாட்டிலும் தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு விரைவாக கொள்கை முடிவு எடுக்க உள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டது. அதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

Next Story