அண்ணா நகரில் அடுக்குமாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து
அண்ணா நகரில் 3 அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் கம்ப்யூட்டர் நிறுவனம் தீயில் எரிந்து நாசமானது.
பூந்தமல்லி,
சென்னை அண்ணா நகர், 5-வது அவென்யூ பகுதியில் தனியாருக்கு சொந்தமான 3 அடுக்கு மாடி கட்டிடம் செயல்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்தின் தரை மற்றும் 2-வது தளத்தில் தனியார் வங்கியும், முதல் மற்றும் 3-வது தளத்தில் சாப்ட்வேர் நிறுவனமும் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று மதியம் கட்டிடத்தின் முதல் தளத்தில் செயல்பட்டு வரும் சாப்ட்வேர் நிறுவனத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் புகை மண்டலமாக எழும்பியது. இதனை கண்டதும் அங்கிருந்த ஊழியர்கள் மற்றும் தரை தளத்தில் இருந்த ஊழியர்களும் அச்சமடைந்து அங்கிருந்து அலறியடித்து கொண்டு வெளியே ஓடி வந்தனர்.
இந்த தீ விபத்து சம்பவம் குறித்து அண்ணாநகர் தீயணைப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்ததும் அண்ணா நகர், கோயம்பேடு பகுதிகளில் இருந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். இதற்கிடையே தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் தீயானது கட்டிடத்தின் அனைத்து பகுதிகளுக்கும் வேகமாக பரவி கரும்புகை சூழ்ந்து கொண்டது.
பத்திரமாக மீட்பு
இதனால் 3-வது தளத்தில் பணி புரிந்து கொண்டிருந்த கம்ப்யூட்டர் ஊழியர்கள் கீழே வர முடியாமல் பயந்து கொண்டு கட்டிடத்தின் மொட்டை மாடிக்கு ஓடிச் சென்று தஞ்சம் அடைய முயன்றனர். ஆனால் மொட்டை மாடிக்கு செல்லும் வழி பூட்டப்பட்டு இருந்ததால் அங்கேயே நின்று கொண்டிருந்தனர். தீயானது வேகமாக பரவி கொழுந்து விட்டு எரிந்ததால் அவர்களால் கீழே வர முடியாமல் அலறியபடி சத்தம் போட்டனர்.
இதையடுத்து கூடுதலாக வேப்பேரி, வில்லிவாக்கம், அசோக் நகர், மதுரவாயல் ஆகிய பகுதிகளில் இருந்து 7 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் ‘ஸ்கை லிப்ட்’ என்ற தீயணைப்பு வாகனத்தை கொண்டு வந்து கட்டிடத்தின் உயரத்திலிருந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியிலும் வீரர்கள் ஈடுபட்டனர். பின்னர் கட்டிடத்திற்குள் சிக்கியிருந்த 6 ஊழியர்களை மொட்டை மாடிக்கு பாதுகாப்பாக அழைத்துச் சென்று ‘ஸ்கை லிப்ட்’ மூலம் தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.
மின்கசிவு காரணமா?
அதைத்தொடர்ந்து, சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக போராடி கட்டிடத்தில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில் கட்டிடம் முழுவதும் தீயில் எரிந்து சேதமானதில், முதல் தளத்தில் செயல்பட்டு வந்த கம்ப்யூட்டர் நிறுவனத்தில் இருந்த கம்ப்யூட்டர், டேபிள், சேர் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் தீயில் எரிந்து நாசமானது. கட்டிடத்தில் கொழுந்துவிட்டு எரிந்த தீயால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.
இந்த சம்பவம் குறித்து அண்ணாநகர் போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், முதல் தளத்தில் செயல்பட்டு வந்த தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் உள்ள ஏ.சி.யில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து நடந்திருப்பது தெரியவந்துள்ளதாகவும், உரிய நேரத்தில் ஊழியர்கள் வெளியேறியதும் உடனடியாக தீ அணைக்கப்பட்டதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

Related Tags :
Next Story