மின்சார ரெயில்களில் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்த தீவிர நடவடிக்கை தெற்கு ரெயில்வே உறுதி
மின்சார ரெயில்களில் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
சென்னை,
சென்னையில் இரவு 11 மணிக்கு மேல் இயக்கப்படும் புறநகர் மின்சார ரெயில்களில் சமூக விரோத கும்பல்கள் பயணிகளை மிரட்டி பணம், செல்போன்களை பறித்து செல்வதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக ‘தினத்தந்தி’யில் வெளியான செய்திக்கு தெற்கு ரெயில்வே சென்னை கோட்டத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி ஏழுமலை விளக்கம் அளித்துள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது:-
பாதுகாப்பை மேம்படுத்த நடவடிக்கை
சென்னையில் இயக்கப்படும் புறநகர் மின்சார ரெயில்களில் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்து தெற்கு ரெயில்வேயின் சென்னை கோட்டம் செயல்பட்டு வருகிறது.
சென்னை கடற்கரை-செங்கல்பட்டு வழித்தடத்தில் 8 முக்கிய ரெயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
மீதமுள்ள ரெயில் நிலையங்களில் கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.
பயணிகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய பாதுகாப்பு தொடர்பான அம்சங்களை மேம்படுத்த தெற்கு ரெயில்வே சென்னை கோட்டம் பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story