தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி குறைப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும்


தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி குறைப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும்
x
தினத்தந்தி 17 March 2022 3:29 AM IST (Updated: 17 March 2022 3:29 AM IST)
t-max-icont-min-icon

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி குறைப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்.

சென்னை,

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கடந்த 2 ஆண்டுகளாக நீடித்து வந்த தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை 8.5 சதவீதத்தில் இருந்து 8.1 சதவீதமாக குறைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்ததும், இந்த வட்டி குறைப்பு நடைமுறைக்கு வரும் என்று பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மீதான வட்டி விகிதம் நாளுக்குநாள் குறைந்து கொண்டே வருவது தொழிலாளர்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. இது கடந்த 40 ஆண்டுகளுக்கு முந்தைய வட்டி விகிதம் ஆகும்.

தொழிலாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டிய கடமை அரசுக்கு உண்டு. எனவே, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி குறைப்பை மறுபரிசீலனை செய்ய உடனடி நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை கேட்டுக் கொள்கிறேன். மேலும், இதனை மத்திய அரசின் கவனத்திற்கு நேரடியாக எடுத்துச்சென்று, வலியுறுத்தி, தேவையான அழுத்தத்தை அளித்து, வட்டி குறைப்பு நடவடிக்கையை மறுபரிசீலனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தி.மு.க. அரசையும் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story