கொடைக்கானலில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை...!
கொடைக்கானலில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உணவகங்களில் திடீர் சோதனை நடத்தினர்.
கொடைக்கானல்,
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகர் மற்றும் ஏரிச்சாலைப் பகுதியில் உள்ள ஒரு சில உணவகங்களில் கெட்டுப்போன உணவு பொருட்கள் விற்கப்படுவதாக உணவுப் பாதுகாப்புத்துத்துறை அதிகாரிகளுக்கு தகவல் வந்துள்ளது.
இந்த புகாரை தொடர்ந்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி லாரன்ஸ் தலைமையிலான அதிகாரிகள் கொடைக்கானல் பகுதியில் உள்ள ஏரிச்சாலை, கலையரங்கம் பகுதிகளில் உள்ள உணவகங்களில் ஆய்வு செய்தனர்.
அப்போது கலையரங்கம் கார் பார்க்கிங் அருகே உள்ள ஒரு உணவகத்தில் கெட்டுப் போன பரோட்டா, சாதம், இறைச்சி, இட்லி மாவு இருந்தது தெரியவந்தது.
பின்னர் இந்த பொருட்களை கீழே கொட்டி அழித்து கடை உரிமையாளருக்கு நோட்டீஸ் வழங்கினர். இதேபோன்று புகார் மீண்டும் வந்தால் அபராதம் விதிக்கப்பட்டு, கடைக்கு சீல் வைக்க பரிந்துரை செய்யப்படும் என்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி லாரன்ஸ் எச்சரிக்கை விடுத்துச் சென்றார்.
Related Tags :
Next Story