பணி நேரத்தில் செல்போன் பயன்படுத்த போலீசாருக்கு தடை...!!
பணி நேரத்தில் போலீசார் செல்போன் பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆவடி காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார்.
சென்னை,
பணி நேரத்தில் அரசு ஊழியர்கள் செல்போன் பயன்படுத்த அனுமதிக்க கூடாது என்று தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு மதுரைக்கிளை உத்தரவிட்டது. மேலும், அலுவலகங்களில் பணி நேரத்தின்போது செல்போன் பேசுவது, செல்போன் கேமராக்களை பயன்படுத்துவதை ஒழுங்குபடுத்துவது தொடர்பாக அனைத்து ஊழியர்களுக்கும் சம்பந்தப்பட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என்றும், ஏதேனும் அவசர காரணம் எனில் முறையான அனுமதி பெற்று செல்போன் பயன்படுத்த வேண்டும் என்றும் கூறியிருந்தது.
இந்நிலையில் பணிநேரத்தில் போலீசார் செல்போன் பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆவடி காவல்துறை ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட சுற்றறிக்கையில், பணிநேரத்தில் போலீசார், அமைச்சு பணியாளர்கள் செல்போன்களை பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், உத்தரவை மீறி செல்போன் பயன்படுத்தும் போலீசார் மீது அரசு ஊழியர் நடத்தை விதியின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story