நெல்லையில் 3 கழுதைகள் திருட்டு; போலீசார் விசாரணை...!


நெல்லையில் 3 கழுதைகள் திருட்டு; போலீசார் விசாரணை...!
x
தினத்தந்தி 17 March 2022 11:00 AM IST (Updated: 17 March 2022 10:57 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை அருகே 3 கழுதைகள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை, 

நெல்லை மாவட்டம் பாளைங்கோட்டை அருகே உள்ள முன்னீர்பள்ளத்தை அடுத்த மேலச்செவல் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 55), தொழிலாளி. இவர் கழுதைகள் வளர்த்து வருகிறார்.

சம்பவத்தன்று மேயச் சென்ற கழுதைகளில் ஒரு பெரிய கழுதை மற்றும் 2 கழுதை குட்டிகள் என 3 கழுதைகளை காணவில்லை. பல இடங்களில் தேடியும் அவைகள் கிடைக்கவில்லை.

இதுகுறித்து ஆறுமுகம் முன்னீர்பள்ளம் போலீசில் புகார் செய்தார். புகாரின் போில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கழுதைகளை திருடி சென்றது யார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story