மணிலா பருத்தி சாகுபடி செய்த விவசாயிகளுக்கு உற்பத்தி மானியம்
மணிலா, பருத்தி சாகுபடி செய்த விவசாயிகளுக்கு உற்பத்தி மானியம் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
மணிலா, பருத்தி சாகுபடி செய்த விவசாயிகளுக்கு உற்பத்தி மானியம் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
புதுவை வேளாண்துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் அலுவலக செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
உற்பத்தி மானியம்
வேளாண்துறை மணிலா, எள், சிறு தானியம், பயறு வகைகள் மற்றும் பருத்தி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மானியத்தில் இடுபொருட்கள் வழங்குவதற்கு பதிலாக உற்பத்தி மானியம் வழங்குகிறது. அதன்படி கடந்த ஆண்டு மணிலா, எள், சிறுதானியம், பயறு வகைகள் மற்றும் பருத்தி சாகுபடி செய்த உழவர்களுக்கு உற்பத்தி மானியம் அவர்களது வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.
மணிலா சாகுபடி செய்த விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.5 ஆயிரம் வீதம் 444 விவசாயிகளுக்கு ரூ.26 லட்சத்து 21 ஆயிரமும், எள் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.3 ஆயிரம் வீதம் 217 விவசாயிகளுக்கு ரூ.8 லட்சத்து 19 ஆயிரமும், சிறுதானியம் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.5 ஆயிரம் வீதம் 60 விவசாயிகளுக்கு ரூ.3 லட்சமும் செலுத்தப்படுகிறது.
பருத்தி சாகுபடி
பயறு வகைகள் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.2 ஆயிரம் வீதம் 878 பேருக்கு ரூ.20 லட்சத்து 15 ஆயிரமும் மற்றும் பருத்தி சாகுபடி செய்த விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.41 ஆயிரமும் விவசாயிகளுக்கு உற்பத்தி மானியம் அவர்களது வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story