தமிழகத்தில் 100 க்கு கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு


தமிழகத்தில் 100 க்கு கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 17 March 2022 8:05 PM IST (Updated: 17 March 2022 9:18 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 100-க்கும் கீழ் குறைந்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா 3-வது அலை கட்டுக்குள் வந்துள்ளது.  கடந்த சில வாரங்களாகவே தொற்று பாதிப்பு வேகமாக சரிந்து வருவது மக்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது. அந்த வகையில், தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 100-க்கும் கீழ் குறைந்துள்ளது.

தமிழகத்தில் இன்று  மேலும் 70 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 34 லட்சத்து 52  ஆயிரத்து 215- ஆக உயர்ந்துள்ளது. 

கொரோனா பாதிப்பில் இருந்து மேலும் 146- பேர் குணம் அடைந்துள்ளனர்.  கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 34,13,394 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் இன்று ஒருவர்   உயிரிழந்துள்ளார் . கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 38,025 ஆக உயர்ந்துள்ளது.  கொரோனா தொற்று பாதிப்புடன் 796- பேர்  தற்போது சிகிச்சையில் உள்ளனர். தலைநகர் சென்னையில் 20 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது


Next Story